2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

'தமிழ் மக்கள் பல அழிவுகளைச் சந்தித்தவர்கள்'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 04 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

'தமிழ் மக்களாகிய நாம் நீண்டகாலமாக பல அழிவுகளை சந்தித்து தற்போதே சாதாரணமான சூழலில் வாழ்ந்து வருகின்றோம். இருப்பினும், எமது சமூகத்தில் அபிவிருத்தி இல்லை. இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பில்லையென்ற நிலைமை தற்காலத்திலும் மேலோங்கிக்கொண்டிருப்பதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

கல்முனை இராமகிருஸ்ண மகா வித்தியாலய மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப்போட்டி, அவ்வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'தற்போதைய சூழ்நிலையில் தொழில்வாய்ப்பின்மை இளைஞர்கள் மத்தியில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரையில் தொழில்வாய்ப்பும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை என்ற நிலைமை தற்போதைய சாதாரண சூழலிலும் மேலோங்கிக்கொண்டே செல்கின்றது. இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால், எதிர்காலச் சந்ததியின் இருப்பை பாதுகாக்க முடியும்' என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--