2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

'தமிழ் -முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டுள்ளனர்'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

கடந்த காலத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் இன ரீதியான பிரிவினை காணப்பட்டதுடன், கசப்பான சம்பவங்களும் இடம்பெற்றிருந்தது. ஆனால், தற்போது தமிழ் -முஸ்லிம் மக்கள் பெரும்பாலான விடயங்களில் ஒன்றுபட்டு செயற்படுவதாக முஸ்லிம் காங்கரஸின் மத்தியகுழு உறுப்பினரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமானஎம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை கல்வி வலயம் ஏற்பாடு செய்து நடத்திய சிறுவர் தின நிகழ்வு, இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த நாட்டில் நல்லாட்சி நடைபெறுகின்றது. இந்நிலையில்  தமிழ் -முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமையாகவுள்ளோம். துரதிஷ்டவசமாக காணப்பட்டுவந்த பாகுபாடும் வேறுபாடும் எங்கள் மத்தியில் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. அது இன்று கடந்துவிட்டது| என்றார்.

'மேலும், தற்போது குழந்தைகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவரினதும் கடமையாக உள்ளது. மிருகங்களிடமிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதும் மனிதர்களிடமிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதும் கடினமானதாக இருக்கின்றது. இதனால், சிறுவர்களை பாதுகாப்பதில் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான, மற்றவர்களை மதிக்கின்ற நல்ல பண்பாளர்களாகவும் கலசாரத்தை மதித்து நடக்கின்றவர்களாகவும் மாற்றியமைக்கும் பொறுப்பும் எங்களிடத்தில் இருக்கின்றது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X