2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

தேசிய மாநாட்டுக்கான கலந்தாலோசனைக் கூட்டம்

Princiya Dixci   / 2016 மார்ச் 14 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டுக்கான கலந்தாலோசனைக் கூட்டம், ஏறாவூர் குல்லியத்துல் தாரில் உலூம் அறபிக் கலாசாலை முன்றலில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர்க் கிளை கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளருமான யூ.எல். முஹைதீன் பாவா தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஷாஹிர் மௌலானா, மு.கா தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் அமைச்சர் றவூப் ஹக்கீமின் இணைப்பாளருமான யூ.எல்.எம். முபீன் உட்பட மு.கா.வின் முக்கியஸ்தர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் 19ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய பேராளர் மாநாடு, அம்பாறை மாவட்டம் - பாலமுனையில் இடம்பெறவுள்ளது. 

இந்த தேசிய மாநாட்டுக்கான ஏற்பாடுகளுக்காக நாடுபூராகவும் கலந்தாலோசனைக் கூட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .