Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நல்லதம்பி நித்தியானந்தன்
தென்னிலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் செய்து மூடப்பட்ட மதுபானசாலைகளின் அனுமதிப்பத்திரங்களைக் கொண்டு மட்டக்களப்பில் மதுபானசாலைகள் இயங்கி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
கிரான் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (20) அப்பிரதேச செயலத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தென்னிலங்கையில் மதுபானசாலைகள் வேண்டாம் என்று பொதுமக்கள் கூறி ஆர்ப்பாட்டங்கள் செய்து மதுபானசாலைகள் மூடப்பட்டன. அம்மதுபானசாலைகளுக்கு மட்டக்களப்பில் அனுமதி வழங்கிய நிலையில் அவை இயங்குகின்றன.
தற்போது மட்டக்களப்பில்; 57 மதுபானசாலைகள் இயங்குகின்றன. மேலதிகமாக 13 மதுபானசாலைகள் விஸ்தரிக்கப்படவுள்ள நிலையில், மொத்தமாக 70 மதுபானசாலைகள் காணப்படும்.
இங்குள்ள சனத்தொகைக்கேற்ப 20 மதுபானசாலைகள் இருக்கவேண்டிய நிலையில், 70 மதுபானசாலைகள் காணப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
தென்னிலங்கையில் மதுபானசாலைகள் வேண்டாம் என்று கூறி அங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றமை போன்று, இங்குள்ள பொதுமக்களினாலும் ஏன்; இவ்வாறு செய்ய முடியாது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago