2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

'திராய்மடுவில் சடலங்கள் எரிக்கப்படவில்லை'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

திராய்மடுப் பிரதேசத்தில் சடலங்களோ அல்லது மனித உடல் பாகங்களோ மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையால் எரிக்கப்படவில்லை என அவ்வைத்தியசாலைப்; பணிப்பாளர், டொக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை தெரிவித்தார்;.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்;டச் செயலகத்தில் இன்று (26) நடைபெற்றது. இதன்போது மாகாணசபை   உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து சடலங்கள் மற்றும் மனித உடல் பாகங்கள் திராய்மடுவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, எரிக்கப்படுகின்றது என்ற செய்தியை ஊடகம் ஒன்றில் நான் பார்த்தேன்.  இது தவறான செய்;தியாகும்.

சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட எரியூட்டி இயந்திரமானது, சுற்றாடல்த்துறை அதிகாரிகளின் அங்கிகாரத்துடன் திராய்மடுவில் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வைத்தியசாலையிலிருந்து சடலங்களோ அல்லது மனித உடல் பாகங்களோ கொண்டு சென்று எரிக்கப்படவில்லை' என்றார்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .