2021 மே 06, வியாழக்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழுர்,கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக்கட்டடம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் ரி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதமஅதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,மா.நடராஜா,இரா.துரைரெட்ணம்,  விசேட அதிதியாக பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சுமார் 56 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த இரு மாடிக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திறப்பு விழாவில் கலந்துகொண்ட அதிதிகள் பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .