2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

‘நாடாளுமன்றத்தில் பொறுப்புக் கூறாத வெறுப்புப் பேச்சுகள்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 ஜனவரி 09 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொறுப்புக் கூறாத வெறுப்புப் பேச்சுகளுக்கு, நாட்டு மக்கள், இனிமேலும் அதிக இழப்புகளைச் சந்திக்க முடியாதென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில், சரத் பொன்சேகா எம்.பி ஆற்றிய உரை தொடர்பாக இன்று (09) அறிக்கையொன்றை அவர் வெளியிட்டார். அவ்வறிக்கையில், “நாட்டின் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளை அங்கிகரிக்கும் உயர் சபையில் சரத் பொன்சேகா போன்ற தேசிய அரசியல்வாதிகள் இனவாத, மதவாத சிந்தனைகளை உயிரூட்டுவது வெறுக்கத் தக்கதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

“முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில், தேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் ஒருவரை ஏன் நியமித்தார்கள், தமிழ் பயங்கரவாதச் சூழல் இருந்த நேரத்தில் தமிழ்ப் புலனாய்வு அதிகாரியை நியமித்திருந்தால் யுத்தத்தை முடித்திருக்க முடியுமா?” என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு, எதிர்ப்புத்  தெரிவிக்கும் வகையிலேயே, மேற்படி அறிக்கை, முன்னாள் முதலமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் சிறுபான்மையினரைக் குறிவைத்,து சரத்பொன்சேகா பேசியிருப்பது இந்த நாட்டில் தலைவர்களே இனவாத வெறுப்புணர்வை விதைக்கின்றார்கள் என்பதற்கு முன்னுதாரணமாய் அமைந்துள்ளதாக சாடியுள்ள முன்னாள் முதலமைச்சர், “இத்தகைய இன வெறுப்புப் பேச்சுகளை, நாட்டு நலன் கருதி நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .