2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

நிர்வாணமாக உலாவியவரை கைது செய்ய நடவடிக்கை

Editorial   / 2019 நவம்பர் 26 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பேக்கரி வீதியில், நேற்று முன்தினம் இரவு இளைஞன் ஒருவன் ஆடையின்றி நடமாடியுள்ளார்.

குறித்த இளைஞனைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 இது தொடர்பில் தெரியவருவதாவது,

சனநடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் குறித்த பகுதியில் இளைஞன் ஒருவன் ஆடைகள் எதுவுமின்றி நிர்வாணமாக அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்துள்ளார்.

அவ்வாறு இளைஞன் சுற்றித்திரிந்த காட்சி, அப்பகுதியில்  அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியுள்ளது. குறித்த காணொளியைக் கண்டு கொண்ட உரிமையாளர், பொதுமக்களின் உதவியுடன்  அவ் இளைஞனை அடையாளம் கண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இளைஞனை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .