Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மார்ச் 28 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இரவு நித்திரைக்குச் சென்ற குடும்பப் பெண்ணொருவர் காலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
புதிய காத்தான்குடி - 03, சென்றல் வீதி, இரண்டாம் ஒழுங்கையில் வசித்து வந்த நயிமா (வயது 41) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இப்பெண், தனது வீட்டுக் கடமைகளை முடித்துவிட்டு வழமை போன்று நேற்று ஞாயிறுக்கிழமை (27) இரவு நித்திரைக்குச் சென்றுள்ளார்.
எனினும், பொழுது விடிந்த போதும் அவர் தூக்கத்திலிருந்து எழுந்திராமையால் உறவினர்கள் அவரை அவதானித்தபோது அவர் மரணித்திருந்தது தெரியவந்துள்ளது.
சடலம், வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago