2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

நீரில் மூழ்கி குழந்தை பலி

Niroshini   / 2016 மார்ச் 22 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, செங்கலடி, கொம்மாதுறையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஒன்றரை வயதுக் குழந்தை, நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பரலுக்குள் குப்புற விழுந்து உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொம்மாதுறை உமா மில் வீதியைச் சேர்ந்த சுரேஸ்காந்தன் ஜனார்த்தனன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தத்தித் தத்தி நடந்து வெளியே வந்து நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பரலுக்குள் குப்புற விழுந்துள்ளது.

பெற்றோர் குழந்தையை பரலுக்குள் இருந்து மீட்டு உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் குழந்தைக்கு  ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .