2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைத் திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைவாக, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், நேற்று (25) வழங்கப்பட்டது.

குறித்த முதலுதவிப் பயிற்சியில் சிறுவர் கழகத்தில் அங்கத்துவம் பெறும் மாணவர்களும்  ஆசிரியர்களும் பங்கேற்றிருந்தனர்.

அவசர நிலைமையின் பொருட்டு வைத்தியசாலைக்கு அனுமதிக்க முன்பு வழங்கப்படும் உயிர்காக்கும் முதலுதவி பயிற்சிகள் தொடர்பில் செய்முறை ரீதியாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.

இதன்போது, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் வழங்கப்பட்டன.

வளவாளராக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினர் சோமசுந்தரம் கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன், மண்முனை தென்மேற்கு பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஜி.அருணன், வித்தியாலய அதிபர் சா.விக்னேஸ்வரன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ம.புவிதரன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வ.குகராஜ், கிராமசேவை உத்தியோகத்தர் க.சுவேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X