2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கோபுரம் அமைக்கும் பணி இடைநிறுத்தம்

வா.கிருஸ்ணா   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட களுதாவளை பகுதியில் அமைக்கப்பட்டுவந்த தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணியை இடைநிறுத்தியுள்ளதாக, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தெரிவித்தார்.

களுதாவளை 04ஆம் குறிச்சியில் அமைக்கப்பட்டுவரும் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணியை இடைநிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரி, களுதாவளையிலுள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று (17) முன்னெடுக்கப்பட்டது.

இத்தொலைத்தொடர்பு கோபுரத்தால் பிரதேசத்திலுள்ள மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் தொலைத்தொடர்பு விதிகளுக்குப் புறம்பான முறையில் இது அமைக்கப்படுகிறது எனவும், மக்கள் வாழுமிடங்களில் அமைக்கப்படுகிறது எனவும், இதனால் குறித்த தொலைத்தொடர்புக் கோபுரத்தை அமைப்பதை நிறுத்துமாறும், அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வருகைதந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் கலந்துரையாடியதுடன், குறித்த தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணியை, பொலிஸாரின் உதவியுடன் இடைநிறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--