Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2020 மார்ச் 02 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரபட்சமில்லாத சிறந்த வைத்திய சேவைகள் மக்களுக்குக் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்வதோடு, சிறந்த வைத்திய சேவைகள் கிடைப்பதற்குத் தடைக்கல்லாக இருக்கும் மருத்துவத் துறை மாபியாக்களை புறந்தள்ள வேண்டுமென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்தார்.
குழந்தையில்லா தம்பதியினருக்கான மாபெரும் இலவசக் கருத்தரிப்பு வைத்திய முகாம், ஏறாவூர் அல் முனீறா மகளிர் மகா வித்தியாலயத்தில் நேற்று (01) நடைபெற்றது.
இந்த வைத்திய முகாமின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட், “ஸ்கேன் இயந்திரம் கூட இல்லாத பல அரசாங்க வைத்தியசாலைகள் இன்னமும் இயங்குவதைப் பார்த்து நாம் கவலையடையவேண்டியுள்ளது.
“சிங்கப்பூர் போன்ற மருத்துவத்துறை வளர்ச்சியடைந்த பல நாடுகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த பல தகுதியான நிபுணத்துவ வைத்தியர்கள் கடமையாற்றுகிறார்கள்.
“ஆனால், இலங்கைக்கு வெளிநாட்டு வைத்திய நிபுணர்கள் வருவதில் இலங்கையில் கோலோச்சும் வைத்திய மாபியாக்கள் பெருந்தடையாக இருக்கிறார்கள்.
“அதனால் சிறப்பு வாய்ந்த வைத்திய சேவைகள் இலங்கை மக்களுக்குக் கிடைக்காமல் போய் விடுகின்றன.
“எனவே, இப்போதுள்ள அரசாங்கம் இந்த இலங்கை வைத்திய மாபியாக்களைக் கட்டுப்படுத்தி, சுதந்திரமான நவீன வைத்திய வசதிகளை அனைத்து மக்களும் பெற்றுக் கொள்ள ஆவன செய்ய வேண்டும்” என்றார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago