2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

பாலையடிவட்டை பொதுச்சந்தை மீண்டும் இயங்க நடவடிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

 

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட பாலையடிவட்டைக் கிராமத்தில் அமைந்துள்ள பொதுச்சந்தையை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகப் போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோகநாதன் ரஜனி தெரிவித்தார்.

பாலையடிவட்டையில் கடந்த 1990 ஆம் ஆண்டு காலத்தில் பாரியதொரு பொதுச்சந்தை காணப்பட்டது. யுத்த யூழல் காரணமாக அந்த சந்தைத் தொகுதி வியாபாரம் விடுபட்டு அதற்குரிய கட்டடங்களும் அழிக்கப்பட்டன.

பின்னர் பொதுச்சந்தைக்குரிய அந்தக் காணியில் இலங்கை இராணுவம் தற்போது வரைக் நிலைகொண்டிருந்து வருகின்றனர். இந்நிலையில் அக்காணியிலிருந்து இராணுவம் வெளியேறாத நிலையில், அக்காணிக்கு சற்று அண்மையிலுள்ள காணியில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்தஜரகாந்தனின் (பிள்ளையான்) முயற்சியினால் புதிதாக சந்தைத் தொகுதி கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  இப்புதிய சந்தைக் கட்டடம் அமைக்கப்பட்டு, சிலகாலம் மாத்திரமே அதில் வர்த்தக நடிவடிக்கைகள் இடம்பெற்றன. பின்னர் மீண்டும் அந்த சந்தை வியாபாரமும் இல்லாமல் போய்விட்டது.

இந்நிலையில், போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் கீழுள்ள இந்த பொதுச்சந்தைத் தொகுதியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்து, அப்பகுதி மக்களின் உற்பத்திகளை விற்பனை செய்யும் இடமாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடன், தற்போது அப்பிரதேசத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய தவிசாளர் யோகநாதன் ரஜனி முன்னெடுத்துள்ளார்.

அதற்கிணங்க நேற்று (11,) தூர்ந்துபோய் புற்கள் நிரம்பிக் காணப்பட்ட அப்பொதுச் சந்தை வளாகம் அப்பகுதி மக்களைக் கொண்டு சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன், எதிர்வரும் வியாழக்கிழமை (13) காலை 8.30 மணிக்கு மீண்டும் பாலையடிவட்டை பொதுச்சந்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதில் வியாபாரிகள், பொதுமக்கள், உள்ளிட்ட அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--