2021 மே 12, புதன்கிழமை

பள்ளத்தில் வீழ்ந்து குழந்தை பலி

Thipaan   / 2015 நவம்பர் 21 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, களுவன்கேணி பிரதேசத்தில் நீரோடையொன்றில் தவறிவிழுந்த ஒரு வயதுடைய பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
நேற்று வெள்ளக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கஜேந்திரன் கஜாயினி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
 
ஓலைக் குடிசை வீட்டில் தாய் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் குழந்தை வீட்டுக்கு அருகிலிருந்த நீரோடையில் விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமையல் வேலை முடிந்த பின்னர் தாய் குழந்தையைத் தேடிய போது நீரோடையில் குழந்தை சடலமாக காணப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சம்பவ இடத்துக்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .