2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

பாடசாலை இடைவிலகலை தடுக்கும் வகையில் கிராம மட்ட விழிப்புணர்வு நடவடிக்கை

Thipaan   / 2016 மார்ச் 19 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ட தேவாபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், சிறுவர்களுடைய பாதுகாப்பு மற்றும் பாடசாலை இடைவிலகலை தடுக்கும் வகையில் கிராம மட்ட விழிப்புணர்வு நடவடிக்கை, வியாழக்கிழமை(17), வெள்ளிக்கிழமை (18) மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலை இடைவிலகளை தடுக்கும் வகையிலான மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நீண்ட நாட்களாக பாடசாலை செல்லாத 04 மாணவர்களும் பாடசாலைக்கு விட்டு விட்டு செல்லும் 22 மாணவர்களும் இனங்காணப்பட்டனர்.

உதவிப் பிரதேச செயலாளர ஜி.அருணன் தலைமையில்  வழிகாட்டல் கரத்தரங்கு மற்றும் குடும்ப கலந்துரையாடல் நடாத்தப்பட்டு மாணவர்கள் உடனடியாகப் பாடசாலையில் இணைக்கப்பட்டதோடு ஒருவர் தொழில் பயிற்சி நிலையத்திற்கு இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .