2025 ஜூலை 02, புதன்கிழமை

போதை மாத்திரைகளுடன் முச்சக்கரவண்டிச் சாரதி கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 13 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

விற்பனைக்காக முச்சக்கரவண்டி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 160 போதை மாத்திரைகளை மட்டக்களப்பு, கறுவாக்கேணிப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (12) மாலை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  

கல்முனைப் பிரதேசத்திலிருந்து ஓட்டமாவடிப்  பிரதேசத்துக்கு விற்பனைக்காக இப்போதை மாத்திரைகளை கொண்டுசெல்லப்படுவதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த முச்சக்கரவண்டியை வழிமறித்துச் சோதனை மேற்கொண்டபோது, அதில் போதை மாத்திரைகள் இருந்தமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கரவண்டியும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .