Administrator / 2017 மே 20 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
ஜனாதிபதியின் போதையற்ற நாட்டை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுடன் மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த போதைக்கு எதிரான பேரணி, இன்று (20) நடைபெற்றது.
அரசடி மகாஜனக் கல்லூரியிலிருந்து ஆரம்பமாகி பார் வீதி, திருமலை வீதி வழியாக மட்டக்களப்பு மத்திய கல்லூரி வரை சென்றது.
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எம். அமீர் அலி, கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான கோ. கருணாகரன், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா, ஆர்.துரைரட்ணம் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு போதைக்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .