Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
வயது போன பெற்றோரை ஒரு சுமையாக நாம் கருதக் கூடாது. அவர்களை நாம் சுகமாக பார்க்க வேண்டும் என மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வி.சந்திரமணி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
முதியவர்களுக்கு நாம் கொடுக்கும் கௌரவம் அவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், பராமரிப்பு என்பவற்றை சிறப்பாக மேற் கொள்வதேயாகும்.
முதியோர்களின் வாழ்வாதரம் என்பது இங்கு ஒரு பிரச்சினையாக உள்ளது. ஒருவரை தங்கி வாழும் முதியவர்களே நமது சமூகத்தில் அதிகம் உள்ளனர்.
இவர்களுக்கு மாதாந்தம் அரசினால் வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும்.
சிரேஷ்ட பிரஜைகளை நாம் ஒரு போதும் ஒதுக்கிவைத்து நடந்து கொள்ளக் கூடாது. அவர்களது ஆற்றலும் அனுபவமும் முதிர்ச்சியும் நமக்கு தேவையாகும்.
தங்கி வாழும் நமது சிரேஷ்ட பிரஜைகளின் சுகாதாரத விடயத்தில் கவனம் எடுக்க வேண்டும். அவர்களுக்கான சிறந்த சுகாதார வசதியை ஏற்படுத்தி அவர்களின் உடல் நிலையை மருத்துவ ரீதியாக பரிசோதனை செய்து பரமரித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த வைபவத்தில், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மணிவண்னன், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி உட்பட சபலரும் கலந்து கொண்டனர்.
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago