2020 நவம்பர் 25, புதன்கிழமை

பாழடைந்த வளவிலிருந்து திறன்பேசிகள் மீட்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர், செங்கலடிச் சந்திக்குச் சற்று அப்பாலுள்ள பாழடைந்த வளவு ஒன்றிலிருந்து ஆண்கள் பாவிக்கும் நீளக் காற்சட்டை, 02 திறன்பேசிகள், தொப்பி, காலணி ஆகியவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவை திங்கட்கிழமை (19)  நள்ளிரவுக்கும் இன்று (20) அதிகாலைக்கும் இடைப்பட்ட வேளையில் அவ்விடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இப்பொருட்களுக்குரிய நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது தாக்கப்பட்டு கடத்தப்பட்டாரா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .