Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 28 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
பாலம் கட்டுவதோ, பாதைகள் அமைப்பதோ அபிவிருத்தி இல்லை. மக்களின் மனங்களை வெற்றி கொள்வதே உண்மையான அபிவிருத்தியாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
'இலங்கையில் சமாதான சகவாழ்வுக்கான அணுகுமுறைகள்' பற்றிய தேசிய கருத்தரங்கு, மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இந்த நாடு காலணித்துவ ஆட்சி ஏற்படுவதற்கு முன்னரும் காலணித்துவ ஆட்சிக்காலத்திலும் சிறந்த நாடாக இருந்துவந்தது. மக்கள் மனதில் தேசிய சிந்தனை இருந்தது. ஆனால், காலணித்துவ ஆட்சிக்காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சில தலைவர்களும் சில மதத் தலைவர்களும் இந்த நாட்டை சீரழிவுக்குள் கொண்டுசென்றனர்' என்றார்.
'வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால், இந்த நாடு பிரிந்துவிடுமென சிந்திக்கின்றனர். இந்த நாட்டில் மூவின மக்களும் பூர்வீகக் குடிகளாக உள்ளனர்.
மனித மனங்களில் மாற்றங்கள் ஏற்படாத வரையில் எத்தனை தேசிய கலந்துரையாடல்களை நடத்தினாலும், அதன் பலன்; பூச்சியமாகக் கருதப்படும். நாங்கள் இந்த நாட்டின் பிள்ளைகள் என்ற சிந்தனை அனைவருக்கும் ஏற்பட வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago