2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

‘மட்டக்களப்பு மாவட்டத்தில் 7,444 மாற்றுத்திறனாளிகள்’

Editorial   / 2019 நவம்பர் 26 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி  

மட்டக்களப்பு மாவட்டத்திலே 7,444 மாற்றுத்திறனாளிகள் இதுவரைக்கும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்கள் என, மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.அரியதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுடனான கலந்துரையாடல், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைக் காரியாலயத்தில் நேற்று (25) நடைபெற்றது.

இதில்கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துரைக்கையில்,

“இந்த மாற்றுத் திறனாளிகள் யாவரும் போர்,  விபத்து,  உள்ளிட்ட பல்வேறு விதத்திலே பல்வேறுபட்ட சம்பவங்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளாக்கப்பட்டுள்ளார்கள். இருந்த போதிலும், போரால், குறிப்பாக ஆயுதங்களால் மாற்றுத்தினாளிகளாக்கப் பட்டவர்கள்தான் அதிகம்பேர் உள்ளார்கள்.

“ஆனால், இனிவரும் காலங்களில் இந்த நாட்டிலே போர், யுத்தம், இல்லாமல் நாட்டு மக்கள் அனைவரும் அன்னியோனியமும், சமத்துவம், சமாதான வாழ்வும் ஏற்படவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்.

“இதற்காகத்தான் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம்போன்ற அமைப்புகள் செயற்பட்டு வருவதோடு. நலிவுற்ற மக்களுக்கு தமது சேவைகளையும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக்கிளை திறம்படம மேற்கொண்டு வருகின்றது.

“எமது மட்டக்களப்பு மாவட்டத்திலே அமைந்துள்ள 14 பிரதே செயலாளர் பிரிவுகளிலும் தலா ஒவ்வொரு மாற்றுதிறனாளிகள் அமைப்புகள் உருவாக்கப்பட்டு தற்போது 14 அமைப்புகள் பிரதேச மட்டத்தில் இயங்கி வருகின்றன.

“இந்நிலையில், அந்த 14 அமைப்புகளையும் ஒருங்கமைத்து மாவட்ட மட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சம்மேளனம் உருவாக்கப்பட்டு, அந்த சம்மேளனமும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .