2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் இருவருக்கு அழைப்பாணை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா

பிரதான வீதியில் பொதுமக்களை ஒன்றுதிரட்டி சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில்; கலகத்தை உருவாக்குவதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் இருவருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தமிழரசுக் கட்சியினுடைய மட்டக்களப்புத் தொகுதிக் கிளையின் உப செயலாளர் விஜயகுமார் பூபாலராஜா உட்பட இருவருக்கே நாளை (14) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

பொது பல சேனவின் வருகை தொடர்பாக மட்டக்களப்பு நகரில் கடந்த 03ஆம் திகதி பற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. பொது பல சேனவின் வருகை தடுக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட தடை உத்தரவை மீறி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமண ரத்ன தேரரால் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்;பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது.
 
தேரரின் ஆர்ப்;பாட்டத்துக்கு மட்டக்களப்பு நகரில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்றுதிரட்டி சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் கலகத்தை உருவாக்குவதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் இருவர் மீதும் மட்டக்களப்பு பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .