Suganthini Ratnam / 2015 நவம்பர் 20 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்த பின்னர், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 130 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்ததென்று அரசாங்கம் விசாரணை செய்யவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்
மட்டக்களப்பு கித்துள் ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தில் மலர் வெளியீடும் சாதனையாளர் கௌரவிப்பும் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாணத்தில் மாவிலாறுப் பகுதியில் ஆரம்பித்த இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான யுத்தம் உக்கிரமடைந்து கிழக்கு மாகாணம் முழுமையாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட பின்னர் மக்கள் மீள்குடியமர்தப்பட்டனர். இக்காலப்பகுதியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 130 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் படுவான்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசாங்கம் மறைக்க முற்படுகிறது. காணமல் போனவர்களின் உறவினர்கள் பலர் தமது உறவினர்களை யார் அழைத்துச் சென்றார்கள் என விவரமாக ஆணைக்குழுக்கள் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்கள். குற்றஞ்;சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் விசாரணை நடத்துவதுடன், அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று தகவல் வெளியிட வேண்டும்.
செங்கலடி பதுளை வீதியை அண்மித்த கிராமங்களில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் திட்டமொன்றை நான் விரைவில் அமுல்படுத்தவுள்ளேன்' என்றார்.
5 minute ago
8 minute ago
23 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
23 minute ago
53 minute ago