Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் 7,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளதாகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை வழங்கமுடியாத நிலையிலுள்ளதாகவும்ட மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் எஸ்.அருள்மொழி தெரிவித்தார்.
செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு தினம் மற்றும்; உலக செவிப்புலனற்றோர் தின நிகழ்வு, மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் சனிக்கிழமை (26) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 500 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அப்பிரச்சினைகளை முழுமையாக தீர்க்கமுடியாத நிலைமை உள்ளது.
மேலும், செவிப்புலன் வலுவற்ற சிறுவர்கள் ஏழாம் தரம் மட்டுமே இங்கு கல்வி பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. அவர்கள் மேற்கல்வியை தொடரவேண்டுமானால், யாழ் செல்லவேண்டும். அல்லது இந்தியா செல்லவேண்டும். எனவே, இங்குள்ள அரசியல் தலைவர்கள் இங்கு தரம் ஏழுக்கு மேல் கல்வியை பெறும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தினால் முழுமையாக பராமரிக்ககூடிய விசேட முதியோர் இல்லமொன்று அமைக்கப்படவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 வயதுக்கு குறைந்த 60 வயதுக்கு மேற்பட்ட மூளை வளர்ச்சி குன்றியவர்களை பராமரிப்பதற்கு மட்டுமே நிலையங்கள் உள்ளன. 18 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களை பராமரிப்பதற்கான நிலையங்கள் இல்லை. இவர்களுக்கான நிலையங்களை அமைப்பதற்கு அரசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் முன்வரவேண்டும்' என்றார்.
11 minute ago
22 minute ago
39 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
39 minute ago
45 minute ago