2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

'மட்டு. இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினை கவனத்துக்கு கொண்டுவரப்படும்'

Suganthini Ratnam   / 2016 மே 18 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் தொழில் இல்லாமல் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர்  எடுத்துக்கூறியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் என தொழில் உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார்.

மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் இன்று  புதன்கிழமை நடைபெற்ற தொழில் சந்தையின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் தொழில் வழங்குநர்களுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தி தொழில் பெற்றுக்கொடுப்பதே தொழில் சந்தையின் நோக்கமாகும்.

தொழில் இல்லாத இளைஞர், யுவதிகள் பல எதிர்பார்ப்புகளுடன் தங்களுக்கான தொழிலை தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தொழிலைப் பெற்றுக்கொள்வதற்கு, வழிகாட்டுவதற்காக தொழில் சந்தைகள் நடத்தப்படுகின்றன' என்றார்.

'தொழில் வழங்குநர்களுக்கும் தொழில் பெறுபவர்களுக்கும் இடையில் இதன் மூலம் சிறந்த தொடர்பு ஏற்படுகின்றது. மேலும், தொழில் வழங்குநர்களுக்கும் சில பிரச்சினைகள் உள்ளன. அவ்வாறே, தொழில் பெறுபவர்களுக்கும் சில பிரச்சினைகள் உள்ளன' என அவர் மேலும் கூறினார்.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், மனிதவலு சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை நிலையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பவற்றினால் இந்த தொழில் சந்தை நடத்தப்பட்டது. இதன்போது 9 பேருக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டன. இந்த தொழில் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டிருந்தனர்;.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .