Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு -கரடியனாறு பொலிஸ் பிரிவில், சட்டவிரோதமாக அகழப்பட்ட மணல், பாரியளவில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 13 நிலையங்களை, நேற்று வியாழக்கிழமை சுற்றி வளைத்த பொலிஸார், சுமார் ஆயிரம் கியூப் மணலை கைப்பற்றியுள்ளனர்.
புத்தம்புரி, வண்ணாத்திவில்லு ஆறு, மாவடிஓடை, மக்குளான, பன்குடாவெளி மற்றும் பாலாமடு போன்ற பிரதேசங்களில் மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஜுட் அலோசியஸ் விராட் மற்றும் கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.ஆர.;பீ சேனநாயக்க ஆகியோரின் தலைமையில் புவிச்சரிதவியல் அளவை, சுரங்கங்கள் பணியக அதிகாரிகளும் இணைந்து இச்சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த பிரதேசங்களை அண்மித்துள்ள நீர்நிலைகளில் அகழப்பட்ட மணல் அரசாங்க காணிகளிலும் தனியார் வயல் நிலங்களிலும் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.
கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அகழப்பட்டுள்ளபோதிலும் வாகனங்களோ சந்தேக நபர்களோ பொலிஸாரிடம் சிக்கவில்லை.
எனினும், மணல் மாதிரிகளை நீதிமன்றில் சமர்ப்பிப்பதுடன் செங்கலடி பிரதேச செயலகத்தின் உதவியுடன் காணி உரிமையாளர்களை அடையாளங்காண்பதன் மூலம் சந்தேக நபர்களைக் கைதுசெய்ய முடியுமென பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில், மாரி மழை பெய்யத்தொடங்கியதும் கட்டுமாணப் பணிகளுக்கான மணல் பெறுவதில் சிரமம் ஏற்படும். அச்சமயம் இம்மணலை அதிக விலையில் விற்பனை செய்யமுடியுமென்ற எதிர்பார்ப்புடன் மணல் அகழப்பட்டு, களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினார்.
23 minute ago
54 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
54 minute ago
2 hours ago
3 hours ago