2021 ஜனவரி 20, புதன்கிழமை

மதுச்சாலையில் திருட முற்பட்டவர் மடக்கிப்பிடிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 15 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் 4ஆம் குறிச்சிப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு மதுபானச்சாலையொன்றை உடைத்து திருட முற்பட்ட ஒருவரை பொதுமக்கள் துரத்திப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள அதேவேளை, இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட மற்றுமொருவர் தப்பியோடியுள்ளார்.

மேற்படி மதுபானச்சாலை பூட்டப்பட்டு சற்று நேரத்தில் மதுபானச்சாலையின் பின்புறத்திலிருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனை அருகிலிருந்த கடைக்காரர்கள் அவதானித்தபோது இருவர் மதுபானச்சாலையின் பின்பக்க பூட்டுகளை உடைத்துக்கொண்டு உட்புகுந்தமை தெரியவந்துள்ளது.

அயலவர்கள் மற்றும் வீதியால் சென்றவர்களின் உதவியுடன் திருடர்களைப் பிடிக்க முற்பட்டபொழுது ஒருவர் தப்பியோடியுள்ளார். எனினும், கடைக்குள் ஒழிந்திருந்த பாணந்துறை, சரிக்கமுல்லையைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரைப் பிடித்து பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடையிலிருந்து பணமோ சாராயமோ திருடப்பட்டிருக்கவில்லை என்று மதுபானச்சாலையின் நடத்துநர்கள் தெரிவித்தனர்.
பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .