2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மனித உரிமைகள் தினத்தில் மனித சங்கிலி போராட்டம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல், எஸ். பாக்கியநாதன்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் மனித சங்கிலி போராட்டம் மற்றும் கவன ஈர்ப்பு பேரணி என்பன நடத்தப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், காணாமல் போனவர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

'ஏனையவர்களின் உரிமைகளுக்கான இன்றே எழுவோம்' என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில், ஐந்நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயத்துக்கு முன்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றதுடன், அங்கிருந்து காந்திப்பூங்கா வரையில் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து காந்தி பூங்கா முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றதுடன், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு இணைப்பாளர் அப்துல் அஸீசிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--