Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
யுத்தம் நிறைவடைந்த போதிலும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக்கொண்டே இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி அதன் மட்டக்களப்பு அலுவலகம் இன்று (9) நடாத்திய வைபவத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர், 'நமது நாட்டில் யுத்தம் நிறைவடைந்த போதிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.
மனித உரிமை என்பது மனித உரிமை ஆணைக்குழுவுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. இந்த நாட்டிலிருக்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும் சொந்தமான ஒரு விடயமே மனித உரிமையாகும். மனித உரிமையை அனைவரும் மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தினத்தை நாங்கள் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றோம்.
யுத்தம் இல்லை என்பதால் மனித உரிமை மீறலும் இல்லாமல் போய் விட்டது என்று; நினைக்கக்கூடும். ஆனால், யுத்தம் முடிந்தாலும் மனித உரிமை மீறல் முடியவில்லை.
ஒவ்வொரு தனி மனிதனும் ஏதோ ஒரு வகையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை சந்தித்தே வருகின்றான்.
நாட்டில் கலாசார ரீதியாக மற்றும் இனங்களுக்கிடையில் விரிவுபடுத்தப்பட்ட செயல்கள் , இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகள், நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் நிகழ்வுகள் என்பன நமது நாட்டில் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
நல்லதொரு மனித உரிமை மிக்க கலாசாரமுள்ள சமூகத்தை உருவாக்குவது முக்கியமாகும். இனங்களுக்கிடையில் பிரிவினை ஏற்படுத்தாத சிறந்த சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும். உரிமைகளுக்காக எல்லோரும் ஒன்றினைந்து குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
கடந்தகால கசப்பான நிகழ்வுகள் எமக்கு அனுபவமாக இருக்கி;றது. மனித உரிமைகள் இந்த நாட்டில் மதிக்கப்படாது, மிதி;க்கப்பட்டபோது அதற்காக பாடுபட்டு உரிமைகளின் அர்த்தங்களை அச்சமான சூழ்;நிலைகளிலும் பாதுகாத்த மனிதநேயமுள்ளவர்கள் பலர் திரைமறைவில் இருக்கின்றனா.;
எனவே, அடுத்தவர்களின் உரிமைகளுக்காக அர்ப்பணி;ப்புடன் செயல்பட்டு அதில் நிம்மதி கண்டவர்கள் இன்று சமுகத்தி;ல் கண்டுகொள்ளப் படாமல் இருப்பது கவலைக்குரியதாகும்.
ஏனையோரின் உரிமைக்களுக்காய் இன்றே எழுவோம் இன்று எமது நாடு நல்லிணக்கப் பொறிமுறைகளை நோக்கிப் பயணி;க்கிறது. இத்தருணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளாந்தம் அதிகரி;த்துக்கொண்டு வருகிறது.
தப்புச் செய்தவர்களை சட்டத்தின் முன் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்காக முயற்சி செய்கின்றபோது, அதனை சகித்துக்கொள்ள முடியாமல் குடும்ப ரீதியில் பாதுகாப்புக் கொடுத்துவருகின்றனர்.
சிறுவர் துஷ்பிரயோகங்களினால் எத்தனையோ சிறார்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளியில் திரியும் போது அப்பாவிச் சிறுவர்கள் காப்பகங்களி;ல் பாதுகாப்புக்காக பராமரி;க்கப்பட்டுவருகின்றனர். இதனால், அச்சிறுவர்கள்; குடும்பங்களுடன் வாழுகி;ன்ற உரிமையினை அனுபவி;க்கத் தவறுகி;ன்றனர். இது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது' என்றார்.
13 minute ago
20 minute ago
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
24 minute ago
2 hours ago