Editorial / 2019 நவம்பர் 26 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித், வ.சக்தி
தேசிய பெறுகை ஆணைக்குழுவின் ஆளுமை விருத்தி மேம்பாட்டு திட்டப் பயிற்சிக் கருத்தரங்கு, மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், இன்று (26) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மட்டக்களப்பு மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இக்கருத்தரங்கில், தேசிய பெறுகை ஆணைக்குழுவின் நடைமுறைகளை காலத்துக்குக் காலம் சில மாற்றங்களுடன் செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத் திணைக்களங்களுக்கு உண்டு என்று வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், பெறுகை நடைமுறை என்பது பொருள்கள், சேவைகள், ஆலோசனைகள், பின்னணிகள், அதிகாரங்கள், வழிகாட்டல்கள் என்பவற்றை கொண்டுதான் அரசாங்க பெறுகை நடைமுறைகளைப் பின்பற்றல் வேண்டும் என்பதும் அரசாங்கக் கூட்டுத்தாபனத் திணைக்களங்களின் விதியாகும் என்றும் கருத்துரைக்கப்பட்டது.
பெறுகை நடைமுறைக்கான ஆளுமை மேம்பாட்டுத்திட்டமாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
7 hours ago
9 hours ago
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
13 Dec 2025