Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
சக நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று, மட்டக்களப்பு இலுப்படிச்சேனை பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
15 வயதுடைய விமலநாயகம் லுவேசாந் (தினு) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளாரென, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் தரம் 10 வகுப்பில் கல்வி பயின்ற இம்மாணவன், நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, கரடியனாறு வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றபோது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக, அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மரண விசாரணையை, திடீர் மரண விசாரணை அதிகாரி எம்எஸ்எம். நஸிர் மேற்கொண்டார்.
சடலம், உடல் கூறுபரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
4 minute ago
30 minute ago
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
30 minute ago
34 minute ago
2 hours ago