2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மயிலம்பாவெளியில் புதிய வீடுகள்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 30 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'சமட்ட செவன' திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, மயிலம்பாவெளிப் பிரசேத்தில் 25 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.

வீடுகள் மற்றும் காணிகள் இன்றியுள்ள 25 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு அந்தக் காணிகளில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் சுமார் ஆறு இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடுகளுக்கான நிர்மாணப்பணி முடிந்துள்ளதுடன், மின்சார வசதி ஏற்படுத்திக்  கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் பயனாளிகளிம் வீடுகள் கையளிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வழிகாட்டலுடன் அமைச்சின் நிதியுதவியிலும் பயனாளிகளின்  பங்களிப்புடனும் இந்த வீடுகளுக்கான நிர்மாணப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .