2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

மற்றுமொரு விபத்தில் அறுவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 10 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, பாசிக்குடா இராணுவ முகாமுக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 06 பேர் காயமடைந்து  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

சுற்றுலா மேற்கொண்டு சம்மாந்துறையிலிருந்து பாசிக்குடாவுக்கு வான் ஒன்றில் பயணித்தவர்களே விபத்துக்கு உள்ளானார்கள்.

அவர்கள் பயணித்த வான் பாதையினை விட்டு; விலகி குறித்த இராணுவ முகாமுக்குள்; நுழைந்து எதிரே இருந்த கட்டடத்தில்  மோதி விபத்துக்கு உள்ளானது.

குறித்த வான் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் அவரை நாளை திங்கட்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வான் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .