2021 மே 08, சனிக்கிழமை

மாஞ்சோலையில் புதிய வீடுகள்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 28 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, ஓட்டமாவடிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலைக் கிராமத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கான நடவடிக்கை புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சால் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கான அடிக்கல் நாட்டும் நடவடிக்கை அக்கிராமத்தில் புதன்கிழமை (27) நடைபெற்றது.இவ்வீடுகளுக்கான அடிக்கல்லை கிராமியப் பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நாட்டிவைத்தார்.

ஒவ்வொரு வீடும் 08 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளதாக ஓட்டமாவடிப் பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.றுவைத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X