2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மாடுகள் களவு போவதாக புகார்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட படுவான்கரைப் பிரதேசத்தில் இரவு வேளைகளில் மாடுகள் களவாடப்பட்டு கடத்திச் செல்லப்படுவதாக புகார் கிடைத்துள்ளதாக திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எம்.நவறஞ்சன் தெரிவித்தார்.

இது தொடர்பாக புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், 'சமீபகாலமாக படுவான்கரைப் பிரதேசத்தில்; மாடுகள் களவு போகின்றமை தொடர்பில் தன்னிடம் மாடு வளர்க்கும் தமது அங்கத்தவர்கள் எழுத்து மூலம் அறியத்தந்துள்ளனர்.

கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தில் அங்கத்தவர்களாகவுள்ள பண்ணையாளர்கள் இந்தக் கால்நடைகள் களவு போகின்றமை தொடர்பில் அச்சமடைந்துள்ளதுடன், ஏழைகளான கால்நடை வளர்ப்போர் நஷ்டமடைந்துள்ளனர்' என்றார்.

'ஒரு சில நாட்களில் சுமார் 10க்கும் குறையாத கால்நடைகள் இரவு வேளைகளில் களவு போயுள்ளன. இது  தொடர்பில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' அவர் வேண்டுகோள் விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .