2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

முதலை கவ்விச் சென்றவரின் உடல் பாகங்கள் மீட்பு

Princiya Dixci   / 2016 மே 28 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
 
முதலை கவ்விச் சென்ற ஒருவரின் தலை மற்றும் கால்களின் பகுதிகள், இன்று சனிக்கிழமை (28) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பூலாக்காடு கிராம சேவகர் பிரிவில் எரிக்கலம்கட்டு பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை, கடந்த வியாழக்கிழமை (26) முதலை கவ்விச் சென்றுள்ளது.

அவரது குடும்ப உறவினர்கள,  வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் மூன்று நாட்களாகத் தேடுதல் நடத்திய நிலையிலேயே அந்நபரின் தலைப்பகுதி ஓர் இடத்திலும் கால்களின் எழும்புப் பகுதிகள் வௌ;வேறு இடங்களிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர், சித்தாண்டி வேலாயுதம் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இளையதம்பி கந்தலிங்கம் (வயது - 63) என்பவரின் உடற் பாகங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .