Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 மே 24 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
2,000 ரூபாய் பொதுசன உதவி மாதாந்தக் கொடுப்பனவைப் பெறத் தகுதியான 70 வயதைத் தாண்டிய முதியோருக்கு அவற்றைப் பெற்றுக்கொடுக்க ஆவன செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளருக்கும் ஏறாவூர் முதியோர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் யூ.எல். முஹைதீன் பாவா, இன்று செவ்வாய்க்கிழமை (24) அனுப்பி வைத்துள்ள வேண்டுகோள் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஏறாவூர் நகரப் பிரதேச செயலாளர் பிரிவில், 70 வயதைக் கடந்தவர்கள் சுமார் 94 பேர் உள்ளனர். இவர்கள் வறுமையில் உள்ளவர்களாக இருப்பதுடன், அரசினால் வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவான 2,000 ரூபாவைப் பெறத்தகுதியுடையவர்களாகவும் இருக்கின்றனர்.
ஆயினும், இந்தக் கொடுப்பனவு ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தினால் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
இது பற்றி பிரதேச செயலகத்தில் வினவியபோது, சமூக சேவைத் திணைக்களத்திலிருந்து உரிய கொடுப்பனவுத் தொகை கிடைக்காத காரணத்தினாலும் கொடுப்பனவு பெறுபவர்களில் ஒருவர் மரணித்த பின்னரே இன்னுமொரு புதிய நபருக்கு அக்கொடுப்பனவை வழங்க முடியுமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனிவே, இந்நிலையை மாற்றி அரசாங்க சுற்று நிரூபத்தின்படி 70 வயதைக் கடந்த சகலருக்கும் உரிய பொதுசன உதவி மாதாந்த உதவு தொகையான 2,000 ரூபாவை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago