2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மூன்று மாதங்களில் நால்வர் உயிரிழப்பு

Niroshini   / 2016 மார்ச் 22 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த மூன்று மாதங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துசார ஜெயலால் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 19ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் காத்தான்குடியில் நான்கு பேரும் மண்முனைப்பற்றில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்களினால் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதுடன் 7 பேர் சிறுகாயங்களும் அடைந்துள்ளனர்.

ஐந்து வாகனங்களும் இந்த விபத்துக்களினால் சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X