2020 நவம்பர் 28, சனிக்கிழமை

'முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டவுடன் அரசாங்கம் அச்சம் அடைந்தது'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முஸ்லிம் அமைச்சர்களும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டவுடன் அரசாங்கம் அச்சம் அடைந்ததாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஆரையம்பதியிலுள்ள சிகரம் ஜும்மாப் பள்ளிவாசலில்; நிர்மாணிக்கப்பட்ட மலசலகூடத்தொகுதி மற்றும் நீர் வசதியை மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (17) மாலை  நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் அவர் உரையாற்றியபோது, 'எமது முஸ்லிம் அமைச்சர்களும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி, அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் ஒன்றுபட்டுள்ளனர். இந்த ஒற்றுமையே  முக்கியமாகும். இந்நிலையில், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து எடுத்துக் கூறியுள்ளோம்;.  

வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் நிம்மதி இழந்து, அச்சத்துடன் வாழ்கின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும்' என்றார்.

'விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு வரைவு சம்பந்தமாக எமது முஸ்லிம் அமைச்சர்களும்; முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  தீவிரமாகக் கவனம்; செலுத்த வேண்டியுள்ளது.
அது முஸ்லிம் சமூகத்துக்குப் பாதகமாக இருக்குமானால், அதை எதிர்க்க வேண்டும். வரப்போகும் தேர்தல் முறையானது முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
புதிய தேர்தல் முறையின் மூலம் 05 அல்லது 06 முஸ்லிம் உறுப்பினர்கள் மாத்திரமே நாடாளுமன்றம் செல்ல முடியும்.

'மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு ஒருபோதும் நாம் ஆதரவு தெரிவிக்க முடியாது. இந்த இணைப்பின் மூலம் முஸ்லிம்களின் விகிதாசாரம் 17 சதவீதமாகக் குறைக்கப்படும். அதற்கு ஒருபோதும் நாம் ஆதரவு தெரிவிக்க மாட்டோம்.

வடக்கு, கிழக்கு இணைப்புக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்காமல் எதிர்ப்பைத் தெரிவிப்போம். இது விடயத்தில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மௌனமாக இருக்கின்றார். அவரது மௌனம் கலைய வேண்டும். இது விடயத்தில் தெளிவான கருத்தை அவர் கூறவேண்டும்' எனவும் அவர் கூறினார்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--