2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

யானைகள் ஊடுருவும் இடங்களில் மின்விளக்குகள்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 19 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச சபைப் பிரிவில்; காட்டு யானைகள் ஊடுருவும் இடங்களை மையப்படுத்தி வீதி மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை நாளை புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

'உலக தரிசனம்' தன்னார்வ தொண்டு நிறுவனத்தின்; உதவியுடனும் போரதீவுப்பற்று பிரதேச சபையின் ஒத்துழைப்புடனும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

முதற்கட்டமாக 30 வீதி மின்விளக்குகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேவை அறிந்து மின்விளக்குகள் பெற்றுக்கொடுக்கப்படும் என உலக தரிசன நிறுவனத்தின்; அப்பிரதேச அபிவிருத்தித்திட்ட முகாமையாளர் பி.றோகாஸ் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .