2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

வாக்கெடுப்பு நிலையத்தில் குரங்குகள் அட்டகாசம்

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு, குரங்குகள் தொல்லை கொடுத்த சம்பவமொன்று, இன்று (16) இடம்பெற்றுள்ளது.

கல்குடா தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கெடுப்பு நிலையக் கூரையிலும் மரங்களிலும், குரங்குகள் பாய்ந்து, அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறித்த பகுதியில் அண்மைக்காலமாக குரங்குகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாக, அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று இன்றையதினம் பெருந்திரளான குரங்குகள் வாக்கெடுப்பு நிலையம் அமைந்துள்ள இடத்துக்கு வந்து, வாக்காளர்களுக்கு தொல்லை கொடுத்துள்ளன.

பெரிதும் அட்டகாசம் செய்த குரங்குகளை வெளியேற்ற சில இளைஞர்கள் நியமிக்கப்பட்டு, குரங்குகள் வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து வெளிவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .