2021 ஜனவரி 27, புதன்கிழமை

விடைபெறும் பிரதி பொலிஸ் மா அதிபர்

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜவ்பர்கான்

 இலங்கை பொலிஸ் சேவையில் 37 வருடங்கள் சேவையாற்றி பல உயர்ப் பதவிகளைப் பெற்று  2017 ஆண்டு முதல் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக கடமை யாற்றி ஒய்வுபெற்றுச் செல்லும் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிரபர் எச் .டி .கே .எஸ் ஜயசேகர வை  கௌரவிக்கும் நிகழ்வு நேற்று  மட்டக்களப்பு வெபர் மைதா னத்தில் நடைபெற்றது.

  இவரைக் கௌரவிக்கும் வகையில் இலங்கை பொலிஸ் சேவையில் 37 வருட சேவையினைப் பாராட்டி, நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார், மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்,மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல்,  கிழக்கு மாகாண பொலிஸ் மா அதிபர் ,மட்டக்களப்பு ,அம்பாறை பிரதி பொலிஸ் அத்தியட்சகர்   சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட பொலிஸ்மா அதிபரின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .