2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

’வணிகமும் கணக்கீட்டு கல்வியும்’ பாடநூல் வெளியீடு

Editorial   / 2019 நவம்பர் 29 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

காத்தான்குடி மத்திய கல்லூரியில் கடமையாற்றும் ஆசிரியர் சிவராசா சிவறமணன் எழுதிய பத்தாம் தரத்துக்கான வணிகமும் கணக்கீட்டு கல்வியும் பாடநூல் வெளியீட்டு விழா, பாடசாலையின் பிரதான மண்டபத்தில், இன்று(29) நடைபெற்றது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கு உட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரியில், தரம் 10 மாணவர்களின் வணிகமும் கணக்கீட்டு கல்வி பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆசிரியர் சிவராசா சிவரமணன் எழுதிய பாடநூல் மாணவர்களுக்கு வெளியிடப்பட்டது.

காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் தலைமையில், பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தரம் 10 புதிய பாடத்திட்டம் வணிகமும் கணக்கீட்டு கல்வியும் எனும் துணைப் பாட நூலை மாணவர்கள் இலகுவில் கற்றுக்கொள்வதற்காகவும் இந்நூல் மாணவர்களுக்கு ஓர் இலகு வழிகாட்டியாகவும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் உறுதுணையாக திகழும் என இந்நூலின் ஆசிரியர் சிவராசா சிவறமணன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .