2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

வாழைச்சேனையில் பலத்த காற்று: ஒருவர் பலி

எம்.எம்.அஹமட் அனாம்   / 2019 நவம்பர் 23 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில், நேற்று (22) அதிகாலை வீசிய சுழல் காற்று காரணமாக, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.

கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில் வீசிய சுழல் காற்று காரணமாக, கறுவாக்கேணியில் அமைந்துள்ள தனியார் ஒருவரின் கடைத் தொகுதியை பராமரிக்கும் பாடசாலை வீதி, சுங்கான்கேணியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஆறுமுகம் (வயது 62) என்பர் உயிரிழந்துள்ளார்.

கடைத் தொகுதியை பராமரிக்கும் குறித்த நபருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது நபர் மீது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்​தமையாலேயே அவர் உயரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .