2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

வாகன விபத்தில் 2 சிறுமிகள் படுகாயம்

Administrator   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு,வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை  காலை 7.30மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்துள்ளனர்.

ஜதுர்ஸிகா(05வயது),காருணியா(07வயது)ஆகிய சிறுமிகளே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரண்டு சிறுமிகளும் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த சிறுமிகள் நாவற்காடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .