2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Suganthini Ratnam   / 2016 மே 25 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, தொழில்நுட்பக் கல்லூரியில் ஆறு மாதக் கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளன.  
நீர்க்குழாய் பொருத்துனர், மரக் கைப்பணியாளர், மேசன் கைப்பணியாளர், வாயு மற்றும் வில் உருக்கி ஒட்டுநர் போன்ற கற்கைநெறிகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இக்கற்கைநெறிகளுக்கு தரம் பத்தைப் பூர்த்தி செய்திருந்தால் போதுமானது.  மேலும். இக்;கற்கைநெறிகளைத் தொடரும் மாணவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் உதவித்; தொகையாக வழங்கப்படும். அத்தோடு போக்குவரத்துக்காக அரை மானியத்துடனான பருவகாலச் சீட்டும் வழங்கப்படும்.  

இக்கற்கைநெறிகளை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சித் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழுடன் என்.வி.கியூ மட்டம் மூன்று சான்றிதழும் வழங்கப்படும் என மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் ரி.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் உதவிக்கனிய அளவையியல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் பழுதுபார்த்தல் (தரம் பத்தினைப் பூர்த்தி செய்திருந்தால் போதுமானது), கணினி வன்பொருளுக்கான சான்றிதழ் போன்ற ஆறு மாத கற்கைநெறிகளுக்கும் விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளன.

இதற்கு க.பொ.த (சா.தா) பரீட்சையில் இரு தடவைக்கு மேற்படாத அமர்வுகளில் கணிதம், தமிழ், விஞ்ஞானம், ஆங்கிலம் உட்பட ஆறு பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும். இதற்கு மாதாந்தம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுவதுடன் போக்குவரத்துக்காக அரை மானியத்துடனான பருவகாலச் சீட்டும் வழங்கப்படும். எனவே மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரியின் வழிகாட்டல் பிரிவில் விண்ணப்பத்தினைப் பெற்று கையளிக்குமாறு அதிபர் தெரிவித்துள்ளர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .