2020 நவம்பர் 25, புதன்கிழமை

வீதிப் போக்குவரத்துத் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன்

'விபத்துகள் அற்ற வீதிகளை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் வீதிப் போக்குவரத்துத் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம், மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று (12)  முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தினுடைய போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கத்தின் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வின்போது, போக்குவரத்துத் தொடர்பான கருத்துரைகள் சாரதிகளுக்கு வழங்கப்பட்டன.

இதனை அடுத்து, வீதிப் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி காந்தி பூங்காவிலிருந்து கோட்டைமுனைச் சந்திவரை   சாரதிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

மேலும், கோட்டைமுனைச் சந்தியை அண்டி அமைந்துள்ள பெற்றோல் நிலையத்தில்; அகண்ட திரையில் போக்குவரத்து விதிகள் தொடர்பான வீடியோக் காட்சி காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் கலந்துகொண்டனர்.

இங்கு மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்  போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.ஐ.ராஜபக்ஷ தெரிவித்தபோது,' இந்த வருடத்தின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் சத்துருக்கொண்டான் முதல் கல்லடிப்பாலம்வரை 98 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது, 03 உயிரிழப்புகள் இடம்பெற்றதுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். சுமார் 51 பேர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன், 14 வாகனங்கள் சேதமடைந்துள்ளன' என்றார்.

 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .