2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

விபத்துகளில் ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, எப்.முபாரக், ஏ.எச்.ஏ.ஹுஸைன்                      

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ள விபத்துகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனையில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில்,  மோட்டார் சைக்களில் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா நாகநந்தன் (வயது 19) உயிரிழந்துள்ளார்.

தலையில் பலத்த காயமடைந்த இவர், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை, கட்டுவன்வில பகுதியில் நடைபெறும் திருமணத்துக்கு மணப்பெண்ணின்  அலங்காரப் பொருட்களை ஏறாவூரிலிருந்து கொண்டு சென்றுகொண்டிருந்த  காரே விபத்தில் சிக்கியுள்ளது.

இதேவேளை, திருகோணமலை, கந்தளாய் ரஜஎல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்த மாணவி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்து பாடசாலைக்குச் செல்லும்போது பாதையை கடக்க முற்பட்ட வேளையில் எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இரண்டு விபத்துகளுடனும் தொடர்புடைய சாரதிகளை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .