2021 மே 18, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Niroshini   / 2016 ஜூலை 30 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை ( 29) மாலை 5 மணியளவில், காரும் மோட்டார் சைக்கிளும்  மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளானதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் மோட்டார் சைக்கிளைச்  செலுத்திச் சென்ற காத்தான்குடி 3 ஆம் குறிச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மத் கலீல் (வயது - 58) என்பவரே படுகாயங்களுக்குள்ளான நிலையில்  காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மழை பெய்து கொண்டிருந்தபோது பிரதான வீதியால் வந்த கொண்டிருந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .